சென்னையில் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு

 

சென்னையில் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி வருவதால் ஜூலை 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. குறிப்பாகச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு பொது முடக்கம் நாளை நள்ளிரவோடு முடிவடையும் நிலையில் மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கை நீடித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு

இந்த நிலையில் சென்னையில் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல்கள் வழங்கலாம் என்றும் காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப் படுவதாகவும் தேநீர் கடைகளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல்கள் மட்டும் வழங்கலாம் என்று தொலைப்பேசியில் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகளுக்கு இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வணிக வளாகங்கள் தவிர்த்து ஷோரூம்கள், பெரிய கடைகள், நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் காலை 10 முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.