சேலத்தின் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு பாலத்திற்கு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பெயரை சூட்டினார் முதல்வர்!

சேலத்தின் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு பாலத்திற்கு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பெயரை சூட்டினார் முதல்வர்!

சேலத்தில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டதால் அதனை கட்டுப்படுத்த ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க கடந்த 2016 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஒப்புதல் வழங்கிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ரூ.441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். அந்த பாலம் 7.8 கி.மீ தூரத்தில் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கும் பணி தொடங்கியது.

சேலத்தின் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு பாலத்திற்கு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பெயரை சூட்டினார் முதல்வர்!

அந்த மேம்பாலத்தில் 173 வலிமையான தூண்கள் அமைக்கப்பட்டு, ஒற்றை ஓடுதளம் 7மீ அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 அகலமும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் கீழே 7மீ அகலத்தில் சேவை சாலை அமைக்கப்பட்டு, அதிநவீன சிசிடிவி கேமராவும் பொறுத்தப்பட்டுள்ளது.இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் இன்று காலை முதல்வர் பழனிசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடக்கி வைத்தார்.

சேலத்தின் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு பாலத்திற்கு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பெயரை சூட்டினார் முதல்வர்!

இதனையடுத்து சேலம் குரங்குசாவடி முதல் நான்கு சாலை வரை அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு அடுக்கு பாலத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரையும், ஏ வி ஆர் ரவுண்டானா முதல் சாரதா கல்லூரி சாலை வரை அமைக்கப்பட்டிருக்கும் பாலத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டுவதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.