இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் சென்னையில் மட்டுமே 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் இடங்களிலும் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே நாளொன்றுக்கு 500 முதல் 700 வரை உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களாக 1000ஐ எட்டியுள்ளது. இவ்வாறு கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்க உள்ளார். அப்போது தமிழகத்தில் மேற்கொள்ள பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஆளுநருக்கு விளக்கம் அளிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் 3 ஆவது முறையாக ஆளுநரை முதல்வர் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

அக்டோபர் மாதம் வரை கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கியை குறைக்க வாய்ப்பில்லை… அடிச்சு சொல்லும் நிபுணர்கள்

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டி விகிதம் குறித்து முடிவு செய்யப்படும். இதனால் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை...

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை கொண்டாடிய தெலங்கானா பஜ்ரங் தளம்….

ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. மேலும் பிரதமர் நரேந்திரா மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் நேற்று தெலங்கானாவில் பஜ்ரங் தளம் அமைப்பினர் ராமர் கோயில்...

விஜய் மல்லையா வழக்கை விசாரித்த அதே சி.பி.ஐ. குழு நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை விசாரிக்கிறது

பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று, பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்கும் என நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதனையடுத்து சி.பி.ஐ. இந்த வழக்கை...

சைபுதீன் சோஸை கைதி போல் அரசு நடத்துகிறது.. நம் நாடு ஜனநாயக குடியரசு நினைவில் வைச்சுகோங்க.. பிரியங்கா

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சைபுதீன் சோஸ். அவரை வீட்டுக்காவலிலிருந்து விடுதலை செய்ய காஷ்மீர் நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி அவரது மனைவி...