• December
    16
    Monday

Main Area

Main



சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி  
முதல்வர் எடப்பாடி பழனிசாமி  

சென்னை: நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார்

நாடு முழுவதும் இன்று 73ஆவது சுதந்திர தினம் உற்சாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக  டெல்லி செங்கோட்டையில்  பிரதமர்  மோடி தேசியக்கொடியை ஏற்றினார்.பிரதமராக நரேந்திர மோடி செங்கோட்டையில் 6வது முறையாகக் கொடியேற்றியுள்ளார். இதையடுத்து அவர் சுதந்திர தின உரையாற்றினார். 

modi

அதே போல் சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்தந்த மாநிலங்களில், மாநில முதல்வர்கள் தேசிய கோடி ஏற்றுவது வழக்கம். அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  காலை 9 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்தில்  மூவர்ணக்கொடியை ஏற்றினார். மூன்றாவது முறையாகத் தேசியக் கொடியை முதல்வர் பழனிசாமி ஏற்றியுள்ளார்.   இதனால் கோட்டை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து போலீசாரின் அணிவகுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

edappadi

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  குறிப்பாகத் தமிழக தலைநகரான சென்னையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.