தொல்லியல் படிப்பில் தமிழ் சேர்ப்பு; நன்றி தெரிவித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

 

தொல்லியல் படிப்பில் தமிழ் சேர்ப்பு; நன்றி தெரிவித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

செம்மொழி பட்டியலில் விடுபட்டிருந்த தமிழ் சேர்க்கப்பட்டதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்தில் சார்பில் அண்மையில் விண்ணப்பம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், தொல்லியல் துறையில் முதுகலை பட்டப்படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி உள்ளிட்ட செம்மொழிகளை பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தொல்லியல் படிப்பில் தமிழ் சேர்ப்பு; நன்றி தெரிவித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

இதனையடுத்து செம்மொழி பட்டியலில் தமிழை சேர்க்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார். அதற்கிணங்க, தொல்லியல் படிப்பில் விடுபட்டிருந்த செம்மொழியான தமிழ் சேர்க்கப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில், தனது கோரிக்கையை ஏற்று தொல்லியல் படிப்பில் தமிழை இணைத்தற்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.