நான் விவசாயிதான்.. ஸ்டாலினுக்கு தான் விவசாயம் பற்றி ஏதும் தெரியாது – முதல்வர் திட்டவட்டம்!

 

நான் விவசாயிதான்.. ஸ்டாலினுக்கு தான் விவசாயம் பற்றி ஏதும் தெரியாது – முதல்வர் திட்டவட்டம்!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தான் விவசாயம் பற்றி ஏதும் தெரியாது என முதல்வர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய முதல்வர், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு நன்மையை செய்யும் என்பதால் தான் ஆதரவு அளித்ததாகவும், விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்தையும் அதிமுக அரசு ஆதரிக்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

நான் விவசாயிதான்.. ஸ்டாலினுக்கு தான் விவசாயம் பற்றி ஏதும் தெரியாது – முதல்வர் திட்டவட்டம்!

தொடர்ந்து, நான் ஒரு விவசாயி தான்.. முக ஸ்டாலுனுக்குத் தான் விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது என்றும் அதிமுக ஆட்சியில் குற்றங்களை கண்டுபிடிக்க முடியாததால் இப்படி எல்லாம் பேசி வரும் ஸ்டாலின் தான், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தார் என்றும் தெரிவித்தார். அதே போல, வேளாண் மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்த மூத்த எம்.பி எஸ்.ஆர் பாலசுப்பிரமணியத்திடம் விளக்கம் கேட்க உள்ளதாகவும் கூறினார்.

மேலும் சசிகலா பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்த முதல்வர், விவசாயிகளின் நலனுக்காகவே அரசு அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.