‘அரசின் அறிவிப்புக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை’ – முதல்வர் திடீர் பேட்டி!

 

‘அரசின் அறிவிப்புக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை’ – முதல்வர் திடீர் பேட்டி!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மக்களின் கோரிக்கைகள் ஒன்றொன்றாக நிறைவேற்றப்படுகிறது. புயல், மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மும்முனை மின்சாரம் அளிக்கப்படும் என்று கூறினார்.

‘அரசின் அறிவிப்புக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை’ – முதல்வர் திடீர் பேட்டி!

தொடர்ந்து, அனைத்து மாநில அரசுகளும் கடன் வாங்கித்தான் நிர்வாகத்தை நடத்தி வருகின்றன. எந்த மாநிலமும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு திட்டங்களை அறிவிப்பது இல்லை. வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்க வேண்டிய அவசியம் இருப்பதால் வாங்கப்படுகிறது. 2011ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்ததாக திமுக தலைவர் ஸ்டாலினே தெரிவித்திருக்கிறார். 10 ஆண்டுகளில் ஏறிய விலைவாசிக்கு ஏற்ப இப்போது ரூ.5.7 லட்சம் கோடி கடன் இருக்கிறது. எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதை நிறைவேற்றிக் காட்டும் அரசு அதிமுக அரசு என அதிரடியாக பேசினார்.

‘அரசின் அறிவிப்புக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை’ – முதல்வர் திடீர் பேட்டி!

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உண்மைக்குப் புறம்பாக பேசி வருவதாக குற்றஞ்சாட்டிய முதல்வர், அரசு அறிவிக்க உள்ளதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதனை அறிவித்து விட்டு நான் சொல்லித்தான் ரத்து செய்ததாக பேசி வருகிறார். அரசியலுக்காக டெண்டரில் முறைகேடு நடந்ததாக கூறி வருகிறார். அரசின் அறிவிப்புகளுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார்.

அதோடு, ஒவ்வொரு பிரச்சனைகளையும் முறியடித்து நான்கு ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நிறைவு செய்துள்ளேன் என்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்திருக்கிறோம் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.