தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம்!

 

தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம்!

ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை மறுபரிசீலனை செய்யக்கோரி முதல்வர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக மக்களின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து மக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க தனியார் வங்கிகள், கடனை திரும்ப செலுத்தக்கோரியும் வட்டிக்கு வட்டி செலுத்தியும் மக்களை கலங்கடித்து வருகின்றன. வங்கிக்கடன் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழக மாவட்டங்களுக்கு கடன் அளிப்பதை குறைத்துக் கொள்ள ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளதாக சுற்றறிக்கை வெளியானது.

தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம்!

இந்த நிலையில் அந்த சுற்றறிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழக மாவட்டங்களுக்கு கடன் அளிப்பதை குறைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் சில ஷாத்துகள் பாரபட்சமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.