கடலூரில் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கினார் முதல்வர்!

 

கடலூரில் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கினார் முதல்வர்!

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று இரவு கரையைக் கடந்தது. இந்த புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தாமல் கடந்து சென்று விட்டது நிவர் புயல். முற்றுலுமாக புயல் ஓயவில்லை என்றாலும், இனி மக்களுக்கு பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புயலால் அதிகளவு பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் கடலூர் மற்றும் விழுப்புரம் தான்.

கடலூரில் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கினார் முதல்வர்!

அந்த மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ள நிவாரண முகாம்களில் தங்கி இருக்கின்றனர். அவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் தேடிச் சென்று நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தேவனாம்பட்டினம் பகுதியில் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் குறைகளை கேட்டறிந்த முதல்வர், அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். நிவர் புயலில் இருந்து மக்களை காத்த தமிழக அரசுக்கு மக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.