‘அதிமுகவில் தான் தொண்டன் கூட முதல்வராக முடியும்’ : பிரச்சாரத்தில் முதல்வர் பேச்சு!

‘அதிமுகவில் தான் தொண்டன் கூட முதல்வராக முடியும்’ : பிரச்சாரத்தில் முதல்வர் பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் களத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடக்கவிருக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், அரசியல் ரீதியாக இது முக்கிய தேர்தலாக பார்க்கப்படுகிறது. தேர்தலை எதிர்நோக்கி ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

‘அதிமுகவில் தான் தொண்டன் கூட முதல்வராக முடியும்’ : பிரச்சாரத்தில் முதல்வர் பேச்சு!

அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதே வேளையில், ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்ற தலைப்பில் முதல்வர் பழனிசாமி மாவட்ட வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திமுக முன்வைக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும், தனது பிரச்சாரத்தின் போது பதிலடி கொடுத்து வரும் முதல்வர் பழனிசாமி, இன்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோவில் அருகே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

‘அதிமுகவில் தான் தொண்டன் கூட முதல்வராக முடியும்’ : பிரச்சாரத்தில் முதல்வர் பேச்சு!

அப்போது, அதிமுகவில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட முதல்வராக முடியும் என்று முதல்வர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். மேலும் உணவு தானிய உற்பத்தியில் தொடர்ந்து தமிழகம் முதலிடம் வகிப்பதாக கூறிய அவர், தமிழக அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது என்றும் செங்கல்பட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது என்றும் கூறினார்.