ஊரடங்கு நீடிக்கப்படுமா? 29 ஆம் தேதி மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை!

 

ஊரடங்கு நீடிக்கப்படுமா? 29 ஆம் தேதி மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இம்மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நீடிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருப்பதால், மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தலைமை செயலாளர் சண்முகம், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்பு, இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு நீடிக்கப்படுமா? 29 ஆம் தேதி மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை!

இந்த நிலையில் வரும் 29 ஆம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி ஊரடங்கை நீடிப்பது குறித்து மருத்துவக்குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அன்று காலை ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர், பிற்பகல் மருத்துவ குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். அந்த கூட்டத்தில் ஊரடங்கு குறித்தும், இபாஸ் நீக்கம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் கருத்துக் கேட்ட பிறகே ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.