இரவு நேர லாக்டவுனா?… தீவிர ஆலோசனையில் முதல்வர்!

 

இரவு நேர லாக்டவுனா?… தீவிர ஆலோசனையில் முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாளொன்றுக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். உயிரிழப்புகளும் 100க்கும் அதிகமாக பதிவாகிறது. பாதிப்புகளை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தியேட்டர்கள், மால்கள், ஷோ ரூம்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இரவு நேர லாக்டவுனா?… தீவிர ஆலோசனையில் முதல்வர்!

அதே போல சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த புதிய கட்டுப்பாடுகள் கடந்த 10ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துவிட்டது. இதனிடையே, புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தியும் பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமென தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வல்லுநர்கள், மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். அக்கூட்டத்தில் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.