மீனவர்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்கிறது – முதல்வர் பழனிசாமி

 

மீனவர்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்கிறது – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் குறைந்து வரும் நிலையிலும், மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே போல ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதல்வர் பழனிசாமி கொரோனா பாதிப்பு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று காலை கன்னியாகுமரிக்கு சென்ற முதல்வர், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மீனவர்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்கிறது – முதல்வர் பழனிசாமி

அதை தொடர்ந்து தற்போது கன்னியாகுமரி மாவட்ட திட்ட பணிகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அக்கூட்டத்தில் பேசிய முதல்வர், கன்னியாகுமரி மீனவர்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து வருகிறது. இதுவரை 27,500 மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார். மேலும், தூண்டில் வளைவு கடல் அரிப்பை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது என்றும் கூறினார்.