“ஸ்டாலின் கூறுவது பொய் குற்றச்சாட்டு.. திமுக ஆட்சியில் தான் ஊழல், தில்லுமுல்லு” – முதல்வர் காட்டம்!

 

“ஸ்டாலின் கூறுவது பொய் குற்றச்சாட்டு.. திமுக ஆட்சியில் தான் ஊழல், தில்லுமுல்லு” – முதல்வர் காட்டம்!

தூத்துக்குடியில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொங்கல் பரிசு வழங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டை கூறுகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. நான் முதல்வர் ஆனதிலிருந்து ஊழல் குற்றச்சாட்டை மு.க ஸ்டாலின் கூறி வருகிறார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஸ்டாலினுக்கு கடுகளவும் இல்லை” என்று தெரிவித்தார்.

“ஸ்டாலின் கூறுவது பொய் குற்றச்சாட்டு.. திமுக ஆட்சியில் தான் ஊழல், தில்லுமுல்லு” – முதல்வர் காட்டம்!

தொடர்ந்து, “திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட ரூ.200 கோடி கணக்கு போட்டுவிட்டு ரூ.425 கோடி தந்தார்கள். ஆற்காடு- திருவாரூர், நாகை- கட்டுமாவடி, ராமநாதபுரம்- தூத்துக்குடி வரை சாலை அமைத்ததில் திமுக ஆட்சியில் முறைகேடு நடந்துள்ளது. திமுக ஆட்சி காலத்தை போன்று டெண்டர் இல்லை. இப்போது எல்லாமே இ- டெண்டர் தான். அதில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. திமுக ஆட்சியில் தான் தில்லுமுல்லு நடந்தது” என்று கூறினார்.

மேலும், “பொய்யான மலிவான விளம்பரத்தை திமுக தேடுகிறது. மு. க ஸ்டாலினால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் திமுக ஆட்சியிலும் டெண்டர் எடுத்தவர்கள் தான். பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, அன்பரசன் உள்ளிட்டோர் மீது வழக்குகள் உள்ளன” என்றும் தெரிவித்தார். அதிமுகவினர் மீதான ஊழல் புகார்கள் குறித்த 97 பக்க மனுவை இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலாலிடம் வழங்கினார். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்த நிலையில், முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.