‘திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி; ஸ்டாலின் தான் அதுக்கு சேர்மேன்’ – முதல்வர் கடும் விமர்சனம்!

 

‘திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி; ஸ்டாலின் தான் அதுக்கு சேர்மேன்’ – முதல்வர் கடும் விமர்சனம்!

திமுகவில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாரும் ஆட்சி பொறுப்பிற்கு வர முடியாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சியில் மொழிப்போர் தியாகிகள் தின நாளில் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதாக ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு, 200 தொகுதி என்று சொன்னார். இரண்டே நாளில் 34 தொகுதியை அவரே இழந்து விட்டார். அவர்களுக்கு மொத்தம் 34 தொகுதி தான் கிடைக்கும். அதுக்கூட இல்லாமலும் போகலாம். அது ஒரு குடும்பக் கட்சி என்று விமர்சித்தார்.

‘திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி; ஸ்டாலின் தான் அதுக்கு சேர்மேன்’ – முதல்வர் கடும் விமர்சனம்!

தொடர்ந்து, நாட்டு மக்களுக்காக திமுக என்ன செய்தது? திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. கட்சி கிடையாது. ஸ்டாலின் தான் அதற்கு சேர்மேன். கனிமொழி, தயாநிதி மாறன் எல்லாம் ஞாயஸ்தர்கள். அவர்கள் எல்லாம் ஸ்டாலின் சொல்வதை தான் கேட்பார்கள். அப்படிப்பட்ட கட்சி தான் திமுக. அந்த கட்சியில் குடும்பத்தினர் தவிர்த்து மற்ற யாரும் ஆட்சிக்கு வர முடியாது. கட்சியிலும் சரி; ஆட்சியிலும் சரி’ என்று அதிரடியாக பேசினார்.

மேலும், கருணாநிதி ஆட்சிக்கு பிறகு ஸ்டாலின் பதவியேற்றார். தற்போது ஸ்டாலினின் மகன் உதயநிதி வந்திருக்கிறார். எல்லாரும் நிதி.. நிதி என்றே பெயர் வைத்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.