‘தமிழக பட்ஜெட் அளவிற்கு 2ஜியில் திமுக ஊழல் செய்திருக்கிறது’ – முதல்வர் குற்றச்சாட்டு!

‘தமிழக பட்ஜெட் அளவிற்கு 2ஜியில் திமுக ஊழல் செய்திருக்கிறது’ – முதல்வர் குற்றச்சாட்டு!

டெண்டர் ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெறவில்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

‘தமிழக பட்ஜெட் அளவிற்கு 2ஜியில் திமுக ஊழல் செய்திருக்கிறது’ – முதல்வர் குற்றச்சாட்டு!

சேலம் மாவட்டத்தின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் 7.5% உள் ஒதுக்கீட்டின் மூலமாக 26 மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைத்திருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழகத்தின் பட்ஜெட் அளவில் திமுக ரூ.1.76 லட்சம் கோடிக்கு ஊழல் செய்து இருக்கிறது. வீட்டிலேயே இருந்து கொண்டு அதிமுக ஆட்சியில் ஊழல் ஊழல் என ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார். எனது உறவினருக்கு டெண்டர் கொடுத்துவிட்டதாக பேசிக்கொண்டிருக்கிறார்’ எனத் தெரிவித்தார்.

‘தமிழக பட்ஜெட் அளவிற்கு 2ஜியில் திமுக ஊழல் செய்திருக்கிறது’ – முதல்வர் குற்றச்சாட்டு!

இதையடுத்து அரசின் மீது வேண்டுமென்றே அவதூறாக திமுக தலைவர் ஸ்டாலின் பழி சுமத்துவதாக குற்றஞ்சாட்டிய முதல்வர், ‘ஆன்லைனிலேயே டெண்டர் ஆன்லைனிலேயே பணம் செலுத்தும் நடைமுறையில் இருக்கும் டெண்டரில் எப்படி ஊழல் நடக்கும்?. ஆன்லைன் டெண்டரில் யார் வேண்டுமானாலும் ஒப்பந்தப்புள்ளி கூறலாம்’ எனக் கூறினார். மேலும், ரூ.100 கோடி டெண்டரை ரூ.170 கோடிக்கு விட்டு திமுக தான் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது என்றும் கூறினார்.