“திமுகவிடம் கெஞ்சி காங்கிரஸ் 25 சீட் வாங்கியுள்ளது”

 

“திமுகவிடம் கெஞ்சி காங்கிரஸ் 25 சீட் வாங்கியுள்ளது”

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல், வேட்பு மனுத் தாக்கல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முடித்த அரசியல் கட்சிகள் இப்போது தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டிருக்கின்றன. அந்த வகையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினும், அதிமுக முதல்வர் வேட்பாளர் பழனிசாமியும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

“திமுகவிடம் கெஞ்சி காங்கிரஸ் 25 சீட் வாங்கியுள்ளது”

இந்த நிலையில் அறந்தாங்கியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக கடும் விமர்சனத்தை முன்வைத்தார். பழமையான காங்கிரஸ் அடுத்த தேர்தலில் இருக்குமோ இருக்காதோ என தெரியவில்லை என்று கூறிய அவர், திமுகவிடம் கெஞ்சி காங்கிரஸ் 25 சீட்டு வாங்கி இருக்கிறது என அதிரடியாக பேசினார். மேலும், மக்களை ஏமாற்றும் தேர்தல் அறிக்கை மூலம் பச்சை பொய் சொல்லி வருகிறார் என ஸ்டாலினை விமர்சித்தார்.

“திமுகவிடம் கெஞ்சி காங்கிரஸ் 25 சீட் வாங்கியுள்ளது”

முன்னதாக, திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸுக்கு கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் 61 இடங்கள் ஒதுக்கப்பட்டது. 2016ம் ஆண்டு தேர்தலில் 42 தொகுதிகள் வழங்கப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு வழங்கப்பட்டிருக்கும் தொகுதி 25 ஆக குறைந்துள்ளது. இவ்வாறு ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸின் மவுசு குறைந்து கொண்டே வருகிறது. அடுத்த தேர்தலில் என்ன ஆகுமோ என அக்கட்சியினரே புலம்பித் தவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.