அமைச்சர்களை சென்னைக்கு அழைத்தாரா முதல்வர் பழனிசாமி?!

 

அமைச்சர்களை சென்னைக்கு அழைத்தாரா முதல்வர் பழனிசாமி?!

அதிமுக அமைச்சர்களை முதல்வர் சென்னைக்கு அழைத்ததாக வெளியான தகவல் பற்றி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விளக்கம் அளித்தார்.

அதிமுகவின் தற்போது நிலவும் பெரும் பிரச்னையான அடுத்த முதல்வர் வேட்பாளர் குறித்து வரும் 7ம் தேதி ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் இணைந்து அறிவிக்க உள்ளனர். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிமுகவின் அனைத்து பிரநிதிகளுடன் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமிக்கும் ஓபிஎஸ்க்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்ததால், பிரச்னைக்கு தீர்வு காண முடியமால் போய்விட்டது. இதனைத் தொடர்ந்து 7ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் பாஜக தலையீடு இருக்குமோ என சந்தேகம் எழுந்திருக்கிறது.

அமைச்சர்களை சென்னைக்கு அழைத்தாரா முதல்வர் பழனிசாமி?!

தொடர்ந்து, வரும் 6ம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வர வேண்டும் என கட்சி தலைமை உத்தரவிட்டது. சசிகலா முதல்வராக முயற்சித்த போதும், அதிமுக எம்.எல்.ஏக்கள் எல்லாரும் வரவழைக்கப்பட்டு கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அதனால் இந்த முறை எந்த விடுதியோ? எத்தனை நாட்கள் ஆகுமோ? என எம்.எல்.ஏக்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்கள்.

அமைச்சர்களை சென்னைக்கு அழைத்தாரா முதல்வர் பழனிசாமி?!

இதனிடையே 5ம் தேதி முதல்வர் பழனிசாமி, எல்லா அமைச்சர்களையும் சென்னைக்கு வரவழைக்கச் சொல்லயிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அதனை பற்றி விளக்கம் அளித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மக்கள் பணிக்காகவே திங்கள், செவ்வாய் மற்றும் புதனில் சென்னையில் அமைச்சர்கள் தங்கியிருக்க முதல்வர் கூறியதாகவும் அரசியல் ரீதியான காரணங்கள் இதில் ஏதுமில்லை என்றும் தெரிவித்தார்.