10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு!

10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட3,882 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94, 049 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.26 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு!

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,264 ஆக அதிகரித்துள்ளது.  இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள RT – PCR சோதனைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு!
இந்நிலையில் 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 5 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ள நிலையில் மேலும் 10 லட்சம் கருவிகள் வாங்கப்படுகிறது என கூறியுள்ளார்.