கெலவரப்பள்ளி நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு!

 

கெலவரப்பள்ளி நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல நீர்த்தேக்கங்கள் நிரம்பியிருக்கின்றன. நீர் நிலைகள் நிரம்பி வருவதால் அதிலிருந்து பாசனத்திற்காக நீர் தீர்க்கப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறந்து விடுமாறு முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நீர் திறந்து விடப்படுகிறது. அதே போல பல அணைகளில் இருந்தும் பாசனத்துக்கு நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கெலவரப்பள்ளி நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு!

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி நீர்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதல்போக பாசனத்துக்காக நாளை முதல் டிசம்பர் 9 ஆம் தேதி வரை நீர் திறக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த நீர்திறப்பின் மூலமாக ஓசூர் வட்டத்தில் உள்ள 8,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.