முதலமைச்சர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!

 

முதலமைச்சர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்த வைரஸ் இப்படியே நீடித்தால் ஜூலை மாத இறுதிக்குள் தமிழகத்தில் 2 லட்சம் பேர் பாதிப்பார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் சுழற்சி முறையில் 50% ஊழியர்களுடன் இயங்கத் தொடங்கியது. அந்த வகையில் தலைமை செயலகமும் இயங்கி வருகிறது.

முதலமைச்சர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!

இதனால் தலைமை செயலக ஊழியர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பதாகவும் கடந்த 8 ஆம் தேதி நிலவரப்படி கிட்டத்தட்ட 50 ஊழியர்கள் கொரோனாவின் பிடியில் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 250 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 138 தலைமை செயலக ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டது. அதனால் அரசு அலுவலகங்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் மூடப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முதலமைச்சர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.