ஜூன் 1 முதல் மீண்டும் முழு ஊரடங்கை அறிவிக்க மோடி திட்டம்..? முதல்வர்கள் கலக்கம்!

 

ஜூன் 1 முதல் மீண்டும் முழு ஊரடங்கை அறிவிக்க மோடி திட்டம்..? முதல்வர்கள் கலக்கம்!

நாடு முழுக்க மீண்டும் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால், பல மாநில முதல்வர்களும் கலக்கத்தில் உள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முழு ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். மூன்றாவது முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோது சில தளர்வுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், தாராளமாக தளர்வுகள் வழங்கப்பட்டன. இதற்குள்ளாக இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியது.

ஜூன் 1 முதல் மீண்டும் முழு ஊரடங்கை அறிவிக்க மோடி திட்டம்..? முதல்வர்கள் கலக்கம்!
தற்போதுதான் கொரோனா உண்மையில் தன்னுடைய வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையைப்போல், மரணம் அடைபவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. ஊரடங்கை கட்டாயமாக்கி, மக்களை வீட்டுக்குள் வைக்காவிட்டால் உயிரிழப்புக்களை தடுப்பது கடினம் என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் முழு ஊரடங்கை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தங்களுக்குத் தர வேண்டிய நிதியை அளித்துவிட்டு முழு ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மாநில அரசுகள் கூறுவதை மத்திய அரசு ஏற்கும் நிலையில் இல்லை. இந்த நிலையில் பொது மக்கள் மத்தியில் முழு ஊரடங்கு பற்றிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள் ஒவ்வொருவராக முழு ஊரடங்கு வேண்டும், இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பேச வைத்துள்ளது பா.ஜ.க.

ஜூன் 1 முதல் மீண்டும் முழு ஊரடங்கை அறிவிக்க மோடி திட்டம்..? முதல்வர்கள் கலக்கம்!
முழு ஊரடங்கு வந்தால் அரசு நிர்வாகம் செயல்பட, ஊழியர்களுக்கு சம்பளம் கூட அளிக்க முடியாத நிலையில் பல மாநில அரசுகள் உள்ளன. எனவே, பாதிப்பு உள்ள பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு இருக்கட்டும். மற்ற பகுதிகளில் ஊரடங்கு வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றன. பலரும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இதனால், கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்துவது பலன் அளிக்காது. மீண்டும் ஒரு 15 நாள் ஊரடங்கை அறிவித்து, பரிசோதனை அளவை அதிகரித்தால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம், இல்லாவிட்டால் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரக்கைவிடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பல மாநில முதல்வர்களும் கலங்கிப்போய் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.