தேவைப்பட்டால் பள்ளிகள் திறப்பு மறுபரிசீலனை – புதுச்சேரி முதல்வர் விளக்கம்!

தேவைப்பட்டால் பள்ளிகள் திறப்பு மறுபரிசீலனை – புதுச்சேரி முதல்வர் விளக்கம்!

புதுச்சேரியில் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், தேவைப்பட்டால் இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக புதுச்சேரியில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. வருகை பதிவேடுகள் இன்றி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை முழு கவனத்துடன் பின்பற்றப்பட்டு வருகிறது.

தேவைப்பட்டால் பள்ளிகள் திறப்பு மறுபரிசீலனை – புதுச்சேரி முதல்வர் விளக்கம்!

மேலும், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிற்பகல் 1 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகிறது. புதுச்சேரி அரசு மாணவர்களின் உயிருடன் விளையாடுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.இந்த நிலையில் கிராமப்புற மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் ஆன்லைன் மூலம் பாடம் கற்க முடியாததால் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தேவைப்பட்டால் பள்ளிகள் திறப்பு மறுபரிசீலனை – புதுச்சேரி முதல்வர் விளக்கம்!

பொதுத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாணவர்களுக்கு கொரோனா பரவும் சூழல் நிலவினால் இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.