பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கை!

 

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பு பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களை இந்த பேரிடரில் இருந்து காப்பாற்ற உதவிக்கரம் நீட்டுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் படி, பலர் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கை!

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநில அரசுகளும் மருந்துகளையும் தடுப்பூசிகளையும் கொள்முதல் செய்கின்றன. அதற்கான ஜிஎஸ்டி வரியை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டுமென்று கோரியுள்ளார்.

அதோடு, 3 முக்கிய கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார். நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீடு தொகை மற்றும் அரிசி மானிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும், நிதி இழப்பை ஈடு செய்ய சிறப்பு நிதி வழங்க வேண்டும், மாநில அரசுகள் கடன் வாங்கும் சதவிகிதத்தை மூன்றிலிருந்து நான்காக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.