ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதும் முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்தும்!

 

ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதும் முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்தும்!

சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்.5 ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதும் முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்தும்!

அதில், ஆசிரியர்கள், சமுதாயம் என்னும் கடலின் கரையிலுள்ள கலங்கரை விளக்கங்கள்! ஆசிரியப்பணி என்பது கல்வியைப் புகட்டுவதோடு, மனிதர்களை; அதுவும் மாமனிதர்களை உருவாக்கும் அறப்பணி. என்னரும் தமிழ்நாட்டின்கண் அனைவரும் கற்று இன்புறச் செய்யும் ஆசிரியர்கள் அனைவருக்கும் #TeachersDay வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்லாது அரசியல் தலைவர்கள் பலர் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு காணொளி வாயிலாக விருதுகளை வழங்கினார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை லலிதாவும் திருச்சி மாவட்டம் மணிகண்டம் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆஷா தேவியும் நல்லாசிரியர் விருதைப் பெற்றுக் கொண்டனர்.