Home தமிழகம் மகசூல் பெருக்கம்... மகிழும் விவசாயி - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

மகசூல் பெருக்கம்… மகிழும் விவசாயி – முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை முதல்வர் மு.க ஸ்டாலின் திருச்சிக்கு புறப்பட்டார். அங்கிருந்து காரில் கல்லணை கால்வாய்க்கு சென்ற முதல்வர் ரூபாய் 122 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

மகசூல் பெருக்கம்... மகிழும் விவசாயி - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!
மகசூல் பெருக்கம்... மகிழும் விவசாயி - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள முதலை முத்துவாரி தூர்வாரும் பணியையும் பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணியையும் ஆய்வு செய்தார். அப்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் கே.என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இன்று இரவு தஞ்சையிலேயே தங்கவிருக்கும் முதல்வர் நாளை காலை மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ளார்.

மகசூல் பெருக்கம்... மகிழும் விவசாயி - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

இந்த நிலையில், டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை தான் ஆய்வு செய்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். தமிழ்நாட்டின் நிகர பயிரிடு பரப்பை 75%-ஆக உயர்த்துதல் என்பது தேர்தலுக்கு முன்பாக நான் அளித்த 7 உறுதிமொழிகளில் ஒன்று. மகசூல் பெருக்கம்; மகிழும் விவசாயி என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது! என்று குறிப்பிட்டுள்ளார்.

மகசூல் பெருக்கம்... மகிழும் விவசாயி - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“கணவனை கொலை செய்வது எப்படி”-கூகுளில் தேடிய மனைவி -கணவனுக்கு நேர்ந்த கொடுமை

கூகுள் மூலம் கணவனை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர் . மத்திய பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கெதிபூர்...

இந்தியாவிலேயே முதன்முறையாக… அழிந்துவரும் மரங்களை பாதுகாக்க “மர அறுவைச் சிகிச்சை நிபுணர்கள்”

மக்களையும் பூமியையும் காப்பாற்றுவதற்குகு கிடைத்த மிக முக்கியமான ஆயுதம்தான் மரம். மனிதனுக்கு உயிர் எந்தளவு முக்கியமோ, அதேபோல் அந்த மனிதன் வாழ்வதற்கு மரமும் முக்கியம். ஆனால் அந்த மரங்களைப் போற்றி...

“தடைகளை உடை… சரித்திரம் படை” – ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற உலகின் முதல் திருநங்கை!

மனித சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக திருநங்கைகள் இருக்கிறார்கள். இந்த தொழில்நுட்ப யுகத்தில் கூட அவர்கள் மீதான சமூகத்தின் பார்வை கோரமாகவே இருக்கிறது. சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் அவர்களுக்கு அடிப்படை...

நான் துருவித்துருவி பார்த்தேன்; எனக்கு எதுவும் தென்படவில்லை – ஆளுநர் உரை குறித்து ஓபிஎஸ் அடித்த கமெண்ட்

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட முக்கியமான திட்டங்கள்,கொள்கைகள் ஆளுநர் உரையில் இடம் பெறாததை பார்க்கையில் வாக்குறுதிகள் எல்லாம் ஆட்சிக்கட்டிலில் அமருவதற்காக அள்ளிவீசப்பட்டவையோ என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படுகிறது. மொத்தத்தில் இது...
- Advertisment -
TopTamilNews