மு.க.ஸ்டாலின் எனும் நான்… எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றார் முதல்வர்!

 

மு.க.ஸ்டாலின் எனும் நான்… எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றார் முதல்வர்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக முதல்வராக கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஸ்டாலினை தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவி ஏற்காததால், தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் எனும் நான்… எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றார் முதல்வர்!

அதன் படி, இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது. அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார். மு.க ஸ்டாலின் எனும் நான்… என்ற கூறி பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து, காட்பாடி தொகுதி எம்எல்ஏவாக துரைமுருகன் பதவியேற்றுக் கொண்டார்.

மு.க.ஸ்டாலின் எனும் நான்… எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றார் முதல்வர்!

இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எடப்பாடி தொகுதி எம்எல்ஏவாக எடப்பாடி பழனிசாமியும் போடிநாயக்கனூர் தொகுதி எம்எல்ஏவாக ஓபிஎஸ்சும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக பதவியேற்றுக் கொள்கின்றனர். எம்எல்ஏக்கள் அனைவருக்கும் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.