‘மக்களைத் தேடி மருத்துவம்’… மகத்தான திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

 

‘மக்களைத் தேடி மருத்துவம்’… மகத்தான திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுக்கே சென்று மருந்து வழங்கும் மகத்தான திட்டத்தை சாமனப்பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

தமிழகத்தில் மக்களைத் தேடி வரும் மருத்துவம் என்ற திட்டம் தொடங்கவுள்ளதாகவும் அந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடக்கி வைப்பார் என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். அதன் படி, கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

‘மக்களைத் தேடி மருத்துவம்’… மகத்தான திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சரோஜா என்பவற்றின் வீட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அவருக்கான மருந்துகளை வழங்கினார். அதே போல. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட சந்திரசேகரன் என்பவரின் இல்லத்திற்கு சென்று மருந்து மாத்திரைகளை வழங்கினார். முகவூர் பகுதியை சேர்ந்த கால்கள் இழந்த இருவருக்கு செயற்கை கால்களையும் சூளகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 108 ஆம்புலன்ஸையும் வழங்கினார்.

நோயாளிகளின் வீட்டிற்கே சென்று அவர்களுக்கு மருந்து அளிக்க இந்த புதிய திட்டம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் உள்ளிட்டோர் மருத்துவ வாகனத்தில் வீடு தேடி சென்று சிகிச்சை அளிப்பார்கள். நாட்பட்ட நோய்களான புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கும் மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.