வேளாண் சட்டங்களுக்கு எதிராக தனித் தீர்மானம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தனித் தீர்மானம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. அவையின் தொடக்கத்திலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்க்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார். 3 வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டுமென்றும் விவசாயிகளின் விலையை உறுதி செய்யும் சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் அந்த தீர்மானத்தில் வலியறுத்தப்பட்டது. 3 சட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கும் விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை என்று தெரிவித்த முதல்வர் விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம், வாணிபம் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தனித் தீர்மானம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

வேளாண் சட்டங்கள் குறித்து அவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மண்ணையும் விவசாயிகளையும் காக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் இல்லை. வியர்வை சிந்தி விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை. மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் மூன்று சட்டங்களும் உள்ளன. சுதந்திர இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் போன்ற எழுச்சிமிகுப் போராட்டம் நடந்தது இல்லை. ஒன்றிய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும். மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டுவந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கூறினார்.

ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.