கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை – முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

 

கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை – முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்படுகிறது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் ரெம்டெசிவிருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு ரெம்டெசிவிர் விற்கப்படுவதை தவிர்க்க, சென்னை கீழ்ப்பாக்கத்தில் ரெம்டெசிவிர் விற்பனையை தொடங்கியது தமிழக அரசு.

கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை – முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

ரெம்டெசிவிர் மருந்தை வாங்க பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள், கீழ்பாக்கத்தில் குவிந்தனர். இரவு பகலாக மக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கோவை, திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. மையங்கள் அதிகரிக்கப்பட்டாலும், மருந்து இருப்பு குறைவாக இருப்பதால் மக்களுக்கு ரெம்டெசிவிர் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஒரு விற்பனை மையத்தில் 500 குப்பி மருந்துகள் மட்டுமே விற்கப்படுகிறது. இதனால், 83 நபர்களுக்கு மட்டுமே அந்த மருந்து கிடைக்கும். மற்றவர்களுக்கு மருந்து கிடைக்காத சூழல் நிலவுகிறது.

கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை – முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

இந்த நிலையில், தமிழகத்திற்கு கூடுதலாக 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பியூஷ் கோயலிடம் செல்போன் வாயிலாக பேசிய முதல்வர், தமிழ்நாட்டில் 1.45 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் நுரையீரல் அதிகம் பாதித்தவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.