ஜெயலலிதாவால் மாற்றப்பட்ட கருணாநிதியின் ‘தலைமைச் செயலகம்’ – பக்கா பிளானில் முதல்வர் ஸ்டாலின்!

ஜெயலலிதாவால் மாற்றப்பட்ட கருணாநிதியின் ‘தலைமைச் செயலகம்’ – பக்கா பிளானில் முதல்வர் ஸ்டாலின்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டுவரும் திட்டங்களை முடக்கி வைப்பது, அத்திட்டங்கள் கோப்புகள் வரை மட்டுமே செயல்பட்டிருந்தால் அதனை ஓரங்கட்டுவது போன்ற செயல்கள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கை வந்த கலை. கருணாநிதி காலத்தில் கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை ஜெயலலிதா மருத்துவமனையாக மாற்றியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி சென்னை அண்ணா சாலையில் புதிய சட்டப்பேரவை மாளிகையும், ஓமந்தூரார் வளாகமும் சுமார் 623 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்டது.

ஜெயலலிதாவால் மாற்றப்பட்ட கருணாநிதியின் ‘தலைமைச் செயலகம்’ – பக்கா பிளானில் முதல்வர் ஸ்டாலின்!

தற்போதைய தலைமைச் செயலகம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கிவருகிறது. அக்கோட்டை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் கட்டடங்களில் ஏதாவது மாறுதல் செய்ய நேரிட்டால் கூட மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் வேறு சில அரசு அலுவலகங்கள் வெவ்வேறு வாடகை இடங்களில் இயங்கி வருவதால் வாடகைக்கே கோடிக்கணக்கான பணம் அரசுக்குச் செலவாகிறது. இப்பிரச்சினைகளைக் களையும் நோக்கில் அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் அமையக்கூடிய விதத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கருணாநிதி கட்டிமுடித்தார்.

ஜெயலலிதாவால் மாற்றப்பட்ட கருணாநிதியின் ‘தலைமைச் செயலகம்’ – பக்கா பிளானில் முதல்வர் ஸ்டாலின்!

90 சதவீத வேலைப்பாடுகள் முடியும் தருணத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே தமிழ்நாடு சட்டமன்றம் என்ற போர்டுகள் அனைத்தும் வைக்கப்பட்டு அலுவலகப் பணிகள் தொடங்கியிருந்தன. ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா முதல் வேலையாக புதிய தலைமைச் செயலகத்திற்கு நாங்கள் போக மாட்டோம் என்று கூறினார். மக்களிடம் விமர்சனங்களை வாங்கி குவிக்க கூடாது என்பதற்காக பன்னோக்கு மருத்துவமனையாக அதை மாற்றினார். உண்மையில் அது ஒரு மருத்துவமனைக்கான கட்டமைப்பு கொண்ட கட்டடமே அல்ல. இதனால் கடும் விமர்சனத்துக்குள்ளானார்.

ஜெயலலிதாவால் மாற்றப்பட்ட கருணாநிதியின் ‘தலைமைச் செயலகம்’ – பக்கா பிளானில் முதல்வர் ஸ்டாலின்!

இதனை அப்போதே விமர்சித்த கருணாநிதி, “திமுக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மேம்பாலங்களின் வழியாகத்தானே ஜெயலலிதாவின் கார் செல்லுகிறது. கருணாநிதி கட்டிய மேம்பாலம், அதிலே நான் பயணம் செய்யமாட்டேன் என்று நிறுத்திவிட்டாரா என்ன? நான் கட்டிய கட்டடம் என்பதற்காக அங்கே போகாமலா இருந்துவிட்டார். கோபம் என் மீதுதானே தவிர; நான் கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டடம் என்ன “பாவம்” செய்தது? ஆட்சிகள் மாறும்போது சில திட்டங்கள், சட்டங்கள் மாறலாமே தவிர;

ஜெயலலிதாவால் மாற்றப்பட்ட கருணாநிதியின் ‘தலைமைச் செயலகம்’ – பக்கா பிளானில் முதல்வர் ஸ்டாலின்!

அடிப்படையில் முந்தைய ஆட்சி செய்த மக்கள் நலத்திட்டங்களையெல்லாம் புறந்தள்ள வேண்டும் என்பது ஓர் ஆட்சி மாற்றத்தின் நெறிமுறையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இத்துடன் நிறுத்துகிறேன். இதற்கு மேல் நான் எதுவும் எழுதத் தேவையில்லை என்று கருதுகிறேன். பகுத்தறிந்து பார்க்கும் – பழக்கமும் தெளிவும் தமிழ் மக்களுக்கு அறவே அற்றுப்போய்விட்டதாக நான் கருதவில்லை. அந்த நம்பிக்கையின் ஒரு துளிதான் இந்த அறிக்கை” என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஜெயலலிதாவால் மாற்றப்பட்ட கருணாநிதியின் ‘தலைமைச் செயலகம்’ – பக்கா பிளானில் முதல்வர் ஸ்டாலின்!

வழக்கம் போல இவ்விவகாரத்தை ஜெயலலிதா கண்டுகொள்ளாமல் ஆட்சி நடத்தினார். அதற்குப் பிறகு மீண்டும் அதிமுகவே ஆட்சிக்கு வந்ததால் பழைய தலைமைச் செயலகத்திலேயே அரசு செயல்பட்டது. இச்சூழலில் பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது. கருணாநிதி இல்லாவிட்டாலும் அவர் கட்டிக்காத்த திமுக அரியணையில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது. அவரின் பிள்ளையான ஸ்டாலின் முதலமைச்சராக உள்ளார். தற்போது தனது தந்தையின் கனவு திட்டமான புதிய தலைமைச் செயலகத்திற்குப் புத்துயிரூட்ட அவர் நினைத்திருப்பதாக தகவல்கள் வந்த வண்ணமே இருக்கின்றன.

ஜெயலலிதாவால் மாற்றப்பட்ட கருணாநிதியின் ‘தலைமைச் செயலகம்’ – பக்கா பிளானில் முதல்வர் ஸ்டாலின்!

அந்த கிளியர் ப்ளூ பிரிண்டில் முதல் வேலையாக சமீபத்திய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. அதையும் தனது தந்தையின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி அறிவித்தார். சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தார். தற்போது மருத்துவமனையாக புதிய தலைமைச் செயலகத்தை மீண்டும் மாற்றவேண்டுமென்றால், அதற்குப் பதிலீடாக மற்றொரு மருத்துவமனை கட்டியாக வேண்டும்.

ஜெயலலிதாவால் மாற்றப்பட்ட கருணாநிதியின் ‘தலைமைச் செயலகம்’ – பக்கா பிளானில் முதல்வர் ஸ்டாலின்!

அதன் பொருட்டே கிண்டி மருத்துவமனை அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதைக் கட்டி முடித்துவிட்டு அங்கு இந்த மருத்துவமனையை மாற்றிவிட்டு, புதிய தலைமைச் செயலகத்தில் புதிய அரசு குடியேறும் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக நம்பகதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், “அண்ணா சாலையில் செயல்படும் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், மருத்துவமனைக்கான கட்டமைப்பு இல்லை. இது ஒரு அலுவலகத்துக்கான கட்டமைப்பாகும்.

ஜெயலலிதாவால் மாற்றப்பட்ட கருணாநிதியின் ‘தலைமைச் செயலகம்’ – பக்கா பிளானில் முதல்வர் ஸ்டாலின்!

மற்ற அரசு மருத்துவமனைகளை விட மிகவும் குறைவான நோயாளிகளுக்கே இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனாலும் பராமரிப்புக்காக ஆண்டுக்கு ரூ.3.5 கோடி செலவாகிறது. ஆனால் புதிய மருத்துவமனையில் 500 படுக்கைகளுடன் கட்டப்படவுள்ளன. தற்போதுள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மீண்டும் தலைமைச் செயலகமாக செயல்படுமா என்பது பற்றி தெரியவில்லை” என்றனர்.