மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 40க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை – முதல்வர் ஸ்டாலின்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 40க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை – முதல்வர் ஸ்டாலின்

மக்களை தேடி வரும் மருத்துவம் என்ற திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியான திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மருத்துவ வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்த பின்னர் இரண்டு நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று முதல்வர் ஸ்டாலின் மருந்துகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுக்கே முன்னோடியாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளை மக்கள் தேடிவரும் சூழலை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் வீட்டுக்கே சென்று மருந்துகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 40க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை – முதல்வர் ஸ்டாலின்

தொடர்ந்து பேசிய முதல்வர், இத்திட்டத்தின் மூலம் 40க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 30 லட்சம் குடும்பங்களை சேர்ந்த ஒரு கோடி பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.