மதுரையை சேர்ந்த… சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 

மதுரையை சேர்ந்த… சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி இளங்கோ – தீபா. இவர்களது 7 வயது மகன் ஹரீஸ்வர்மன். இந்த சிறுவன் சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் பணம் சேமித்து வைத்துள்ளார். கொரோனா தடுப்பு பணிக்கு அனைவரும் நிதி வழங்குவதை அறிந்த சிறுவன், தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை கொரோனா தடுப்பு பணிக்கு கொடுத்துள்ளார்.

மதுரையை சேர்ந்த… சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சமூக அக்கறை கொண்ட சிறுவனின் இந்த செயல் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கவனத்துக்கு எட்டியுள்ளது. சைக்கிள் வாங்குவதற்காக வைத்திருந்த பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சிறுவன் செயலை கண்டு வியந்த மு.க ஸ்டாலின், சிறுவனின் ஆசையை நிறைவேற்றுமாறு மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ.தளபதியிடம் கூறியிருக்கிறார். அதன்படி, சிறுவன் ஆசைப்பட்டதைப் போலவே அவருக்கு சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் எம்எல்ஏ தளபதி.

சிறுவனிடம் செல்போன் வாயிலாக பேசிய ஸ்டாலின், கொரோனா பாதிப்பு இருப்பதால் வெளியே சைக்கிளை ஓட்டிச் செல்ல வேண்டாம் என்றும் நன்றாக படிக்க வேண்டும் என்றும் கூறினார். அதைக் கேட்டுக் கொண்ட சிறுவன், ஸ்டாலினை ‘தாத்தா’ என்று அழைத்ததோடு சைக்கிள் வாங்கி கொடுத்ததற்கு நன்றியும் தெரிவித்தார். சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த செயல் அப்பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.