“கலைஞர் , பேராசிரியருக்கு பிறகு துரைமுருகன் தான்” : ஸ்டாலின் பேச்சை கேட்டு கண் கலங்கிய துரைமுருகன்

“கலைஞர் , பேராசிரியருக்கு பிறகு துரைமுருகன் தான்” : ஸ்டாலின் பேச்சை கேட்டு கண் கலங்கிய துரைமுருகன்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் புகழாரம் சூட்டினார்.

“கலைஞர் , பேராசிரியருக்கு பிறகு துரைமுருகன் தான்” : ஸ்டாலின் பேச்சை கேட்டு கண் கலங்கிய துரைமுருகன்

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு பட்ஜெட்டில் துறைவாரியான விவாதங்கள் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இன்று முதல் முறையாக நீர்வளத்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நிலையில் பொதுப்பணித் துறையில் இருந்து நீர்வளத்துறை தனியாக பிரிக்கப்பட்டது. இதற்கு அமைச்சராக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமிக்கப்பட்டதன் மூலம் நீர்வளத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற்றதுடன், உறுப்பினர்களின் பேச்சைத் தொடர்ந்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“கலைஞர் , பேராசிரியருக்கு பிறகு துரைமுருகன் தான்” : ஸ்டாலின் பேச்சை கேட்டு கண் கலங்கிய துரைமுருகன்

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பொன்விழா நாயகராக திகழ்கிறார் துரைமுருகன், புன்னகை எப்போதும் அவரது முகத்தில் இருக்கும். 100 ஆண்டுகால வரலாற்றில் 50 ஆண்டுகாலம் சட்டப்பேரவையை அலங்கரித்துகொண்டுள்ளார் துரைமுருகன்.கலைஞர், பேராசியர் மறைவுக்கு பிறகு எனக்கு வழிகாட்டியாக இருந்து கொண்டிருப்பவர் துரைமுருகன்; கலைஞருக்கு பக்கத்தில் மட்டுமல்ல, அவரது மனதிலும் ஆசனம் இட்டு உட்காந்து இருப்பவர் அமைச்சர் துரை முருகன்.எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் அப்படியே வெளிப்படுத்துபவர்; கட்சிக்கும், ஆட்சிக்கும் உறுதுணையாக இருப்பவர் அமைச்சர் துரைமுருகன் . எந்த துறைகளை கொடுத்தாலும் முத்திரை பதிப்பார். கட்சிக்கும் தனக்கும் வழிகாட்டியாக இருப்பவர் துரைமுருகன் என முதலமைச்சர் பேசியதை கேட்டு கண்கலங்கினார் துரைமுருகன்” என்று புகழாரம் சூட்டினார்.