இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 

இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் மகள் திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

தமிழ் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் என போற்றப்படும் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் இன்று நடைபெற்றது. ஷங்கரின் மூத்த மகள் பெயர் ஐஸ்வர்யா. டாக்டரான இவருக்கு கிரிக்கெட் வீரர் ரோஹித் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தொழிலதிபர் தாமோதரனின் மகனான ரோஹித் புதுச்சேரி ராஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். இவருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இன்று மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக 2.0 படத்தின் கலை இயக்குனர் முத்துராஜ் பிரம்மாண்ட மேடை அமைத்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் படி, நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளனர்.

இயக்குனர் ஷங்கர் அழைப்பு விடுத்ததின் பேரில், முதல்வர் முக ஸ்டாலினும் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் பங்கேற்றுள்ளார். ஷங்கரின் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.