கரூர் புகழூரில் 200 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கரூர் புகழூரில் 200 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கரூர்

கரூர் மாவட்டம் புகழூர் டிஎன்பிஎல் நிறுவனத்தில் 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

கரூர் மாவட்டம் புகழூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சமுதாய கூடத்தில் 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வந்தது. இதன் பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பொதுமக்களின் சேவைக்காக திறந்து வைத்தார்.

கரூர் புகழூரில் 200 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இந்த மையத்தில், 152 ஆக்ஸிஜன் படுக்கைளும், 48 சாதாரண படுக்கைகளும் உள்ளன. இதனையொட்டி, கரூரில் நடந்த துவக்க நிகழ்ச்சியில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிர்சாந்த் வடநேரே, எம்.பி., ஜோதிமணி, டி.என்.பி.எல் ஆலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கரூர் புகழூரில் 200 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இந்த சிகிச்சை மையத்தில் 6 மருத்துவர்கள், 10 செவிலியர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை அளிக்க உள்ளனர். கரூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதித்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் பேரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இந்த புதிய மையம் செயல்பாட்டிற்கு வந்ததால் கரூரில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை தட்டுப்பாடு குறையும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.