#BREAKING: சோனியா காந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

 

#BREAKING: சோனியா காந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

தமிழக முதல்வராக முதல் முறையாக மு.க ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார். காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்த மு.க ஸ்டாலின் டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், முதல்வர் இல்லத்தில் ஓய்வெடுத்தார். அச்சமயம் முதல்வர் ஸ்டாலின் பலரை சந்தித்ததாக தெரிகிறது.

#BREAKING: சோனியா காந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

ஸ்டாலினின் இந்த டெல்லி பயணத்தில் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி, டி.ஆர் பாலு, தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்ட பலர் உடன் சென்றனர். இதையடுத்து, நேற்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த மு.க ஸ்டாலின் அரை மணி நேரம் தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து அவரிடம் கலந்துரையாடினார். 5.30 மணிக்கு அவர்களது சந்திப்பு நிறைவடைந்தது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்துள்ளார். நேற்று பிரதமர் மோடி, சீதாராம் எச்சூரி, டி.ராஜாவை சந்தித்துப் பேசிய நிலையில் இன்று சோனியா காந்தியை சந்தித்துள்ளார். ராகுல் காந்தியையும் அவர் சந்தித்து பேசவுள்ளார்.