மனுவில் சர்ப்ரைஸ் வைத்த இளம்பெண்… திறந்துபார்த்து உருகிப்போன முதல்வர் ஸ்டாலின்!

 

மனுவில் சர்ப்ரைஸ் வைத்த இளம்பெண்… திறந்துபார்த்து உருகிப்போன முதல்வர் ஸ்டாலின்!

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக நீரை மேட்டூர் அணையிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜூன் 12ஆம் தேதி திறந்து வைத்தார். மேட்டூர் அணையைத் திறந்துவைத்த திமுகவைச் சேர்ந்த முதல் முதலமைச்சர் என்ற பெருமையையும் பெற்றார். அப்போது அவரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். அதைப் பெற்றுக்கொண்ட அவர் சென்னை திரும்பினார். அதில் சௌமியா என்ற இளம்பெண் அனுப்பிய மனுவைக் கண்டு ஸ்டாலின் நெகிழ்ந்து போயுள்ளார்.

மனுவில் சர்ப்ரைஸ் வைத்த இளம்பெண்… திறந்துபார்த்து உருகிப்போன முதல்வர் ஸ்டாலின்!

அந்த மனுவிலிருந்த கடிதத்தில் தனது வீட்டு சூழ்நிலைகளை எழுதியிருந்த சௌமியா, தாங்கள் மிகவும் கஷ்டப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். தனக்கு அம்மாவாக இருந்து வேலை வாங்கி தர வேண்டும் என ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். அரசு வேலையைக் கூட தான் எதிர்பார்க்கவில்லை என்றும், ஊருக்கு அருகில் இருக்கும் தனியார் நிறுவனத்திலாவது வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரியிருக்கிறார். இந்த வேலைவாய்ப்பை தனது தாய் மீண்டும் உயிர்பெற்று வந்ததாக தாய் அன்புடன் எதிர்பார்த்து காத்திருப்பேன் என்றும் உருக்கமாக எழுதியுள்ளார்.

இக்கடிதத்துடன் கொரோனா நிதிக்காக தனது 2 சவரன் தங்க செயினையும் வைத்திருக்கிறார். இதைக் கண்டு உருகிப்போன ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.”