“உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு; கொரோனாவை கட்டுப்படுத்துவீர்கள்” – முதல்வர் ஸ்டாலின் எழுச்சியுரை!

“உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு; கொரோனாவை கட்டுப்படுத்துவீர்கள்” – முதல்வர் ஸ்டாலின் எழுச்சியுரை!

தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்ப்பட்வுள்ளது. இந்த ஊரடங்கை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இச்சூழலில் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாலோசித்தார். அப்போது கொரொனா கட்டுப்பாடுகள், ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார்.

“உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு; கொரோனாவை கட்டுப்படுத்துவீர்கள்” – முதல்வர் ஸ்டாலின் எழுச்சியுரை!

அப்போது பேசிய அவர், “அதிகார மோதல்கள் இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனா எனும் பெருந்தொற்றை வீழ்த்த வேண்டும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்கறி, பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் தடையின்றி கிடைப்பதை உள்ளாட்சித்துறை, வேளாண் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

“உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு; கொரோனாவை கட்டுப்படுத்துவீர்கள்” – முதல்வர் ஸ்டாலின் எழுச்சியுரை!

கொரோனா நிவாரண தொகை அனைத்து மக்களுக்கும் முழுமையாக சென்றடைந்ததா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். எனது முயற்சிகளால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது என தலைநிமிர்ந்து நீங்கள் சொல்லும் அளவுக்கு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்; உங்களால் அது முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்றார்.