கோவையில் அதிகரிக்கும் கொரோனா… களத்தில் இறங்கும் முதல்வர் ஸ்டாலின்!

 

கோவையில் அதிகரிக்கும் கொரோனா… களத்தில் இறங்கும் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்பட்டதன் விளைவாக தற்போது பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. சென்னையில் பாதிப்பு பாதிக்குப் பாதியாக குறைந்துள்ளது. ஆனால் கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் குர்ஆனோ பரவல் வேகம் எடுத்துள்ளது. இரண்டாம் அலை பாதிப்பில் முதன் முறையாக சென்னை பாதிப்பை விட கோவை பாதிப்பு அதிகமாக நேற்று பதிவானது.

கோவையில் அதிகரிக்கும் கொரோனா… களத்தில் இறங்கும் முதல்வர் ஸ்டாலின்!

கோவையில் ஒரு நாளைக்கு 13 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். அம்மாவட்டத்தில் நெருக்கடி அதிகமாக இருக்கும் இடங்களில் தான் பாதிப்பு அதிகரிப்பதாகவும் களப்பணியில் 3 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்த பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் ஆட்சியர் நாகராஜனிடம் மனு அளித்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து கோவையில் பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் செல்லவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக பாதிப்பு அதிகமாக இருந்த மதுரை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.