ஆம்புலன்ஸுக்கு வழி விட்ட முதல்வர் ஸ்டாலின்… இணையத்தை கலக்கும் வீடியோ!

 

ஆம்புலன்ஸுக்கு வழி விட்ட முதல்வர் ஸ்டாலின்… இணையத்தை கலக்கும் வீடியோ!

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு காரில் சென்ற வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 29ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் சென்னை விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, ஆம்புலன்ஸ் ஒன்று சைரன் ஒலித்த படி முதல்வர் சென்ற காருக்கு பின் வந்து கொண்டிருந்துள்ளது. அதைக் கண்ட முதல்வர் ஸ்டாலின், ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டுச் செல்லுமாறு டிரைவருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் படி, டிரைவர் ஆம்புலன்ஸுக்கு வழிவிட முதல்வர் சென்ற காருக்கு முன் ஆம்புலன்ஸ் சென்றுள்ளது.

ஆம்புலன்ஸுக்கு வழி விட்ட முதல்வர் ஸ்டாலின்… இணையத்தை கலக்கும் வீடியோ!

இந்த வீடியோவை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. ஒரு உயிரைக் காப்பாற்ற செல்லும் ஆம்புலன்ஸுக்கு வாகன ஓட்டிகள் வழி விட வேண்டும். அதுவே, விதிமுறையும் கூட. ஆனால், இப்போதைய காலக்கட்டத்தில் பலர் அந்த விதிமுறையை பின்பற்றுவதில்லை. அதனால், முதல்வர் ஸ்டாலின் செய்ததைப் போல மக்கள் அனைவரும் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறை இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஆம்புலன்ஸுக்கு வழி விட்ட முதல்வர் ஸ்டாலின்… இணையத்தை கலக்கும் வீடியோ!

மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதில் இருந்து, எதிர்க்கட்சிகள் வாய்ப் பிளக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கொரோனா நிவாரணம் ரூ.4,000, மகளிருக்கு பேருந்தில் இலவசம், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம், அர்ச்சகர்களுக்கு ரூ.4,000 உதவித் தொகை உள்ளிட்ட அறிவிப்புகளும் சரி, கொரோனா வார்டில் ஆய்வு செய்வது, ஆரம்ப சுகாதார மையம் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களில் திடீரென ஆய்வு செய்வது போன்ற செயல்களும் சரி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வரிசையில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.