ஈரோட்டில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

 

ஈரோட்டில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

ஈரோடு

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவங்கி வைத்தார்.

கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார். கடந்த மே 20ஆம் தேதி கோவை, சேலம் மாவட்டங்களில் ஆய்வு பணியை முதல்வர் மேற்கொண்ட நிலையில், கொரோனா தொற்று குறையாததால் மீண்டும் கோவை மாவட்டத்தில் தனது கவனத்தை தொடர்ந்து உள்ளார்.

ஈரோட்டில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

இதனையொட்டி, நேற்று இரவு 9 மணியளவில் ஈரோடு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்கிறார். அதன்பிறகு திருப்பூர் குமரன் கல்லூரியில் ஆய்வு பணி மேற்கொள்கிறார். தொடர்ந்து, கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்கிறார்.

முன்னதாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை 10 ஆயிரம் பேருக்கு வழங்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சு.முத்துசாமி, சாமிநாதன் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் கதிரவன், எம்.பி-க்கள்அந்தியூர் செல்வராஜ் .
கணேசமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .