எல்.முருகனுக்கு போனில் வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

 

எல்.முருகனுக்கு போனில் வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட 43 உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தமிழக பாஜக தலைவர் எல். முருகனின் பெயரும் இடம் பெற்றிருந்தது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் தோல்வியை தழுவினார்.

எல்.முருகனுக்கு போனில் வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

இருப்பினும், 4 பாஜக வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர். எல்.முருகனின் முயற்சியாலேயே இது சாத்தியமான நிலையில் அவரை மத்திய அமைச்சரவையில் இடம் பெறச் செய்துள்ளார் பிரதமர் மோடி. டெல்லியில் நேற்று பதவியேற்றுக் கொண்ட எல்.முருகனுக்கு தகவல் ஒலிபரப்பு, மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை ஆகியவற்றில் இணை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்.முருகனுக்கு செல்போனில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.