‘குட்காவை ஒழிப்போம்’… புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் – முதல்வர் ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பு!

 

‘குட்காவை ஒழிப்போம்’… புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் – முதல்வர் ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பு!

பள்ளி அருகே போதைப் பொருட்களை விற்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழகத்தில் பான்மசாலா, குட்கா உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் தடையை மீறி பல மாநிலங்களிலிருந்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது தொடர்கிறது. இந்த குட்கா பொருட்களை ஒழித்துக்கட்ட தீர்மானத்திருக்கும் திமுக அரசு காவல்துறையை முடுக்கிவிட்டுள்ளது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பான் மசாலா, குட்கா கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

‘குட்காவை ஒழிப்போம்’… புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் – முதல்வர் ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பு!

அதன் படி, தமிழகம் முழுவதும் தீவிர வேட்டை தொடர்கிறது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குட்கா கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பென்னாகரம் எம்.எல்.ஏ ஜி.கே மணி தமிழகத்தில் குட்கா பொருட்கள் கடத்தல் அதிகரிப்பது பற்றி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் குட்கா பொருட்கள் முற்றிலும் தடுக்கப்படும். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்போர், கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குட்கா விஷயத்தில் காவல்துறையினரை ஊக்குவிக்க தமிழக அரசு நிச்சயம் தயங்காது. இதுவரை 14,943 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 11,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். மேலும், பள்ளி கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை தடை சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும். கடும் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்றார்.