‘போராட்ட வழக்குகள் வாபஸ்’ – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

 

‘போராட்ட வழக்குகள் வாபஸ்’ – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். வேளாண் சட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை. வேளாண் சட்டங்கள் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படும் என்று தெரிவித்த அவர், மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென தீர்மானத்தில் வலியுறுத்தினார்.

‘போராட்ட வழக்குகள் வாபஸ்’ – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ், மதிமுக, விசிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இதையடுத்து, குரல் வாக்கெடுப்பின் மூலம் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் செய்யப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். எம்எல்ஏக்கள் வேல்முருகன் மற்றும் ஜவாஹிருல்லா ஆகியோரின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிடுவதாக முதல்வர் விளக்கமளித்துள்ளார்.