முந்தைய அதிமுக ஆட்சியின் மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

 

முந்தைய அதிமுக ஆட்சியின் மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் தனது உரையைத் தொடங்கினார். அவையில் பேசிய முதல்வர், தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற சூழலில் தான் ஆட்சிக்கு வந்தோம் தற்போது ’இல்லை இல்லை’ என்ற சூழலே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம் என்று பெருமிதத்துடன் கூறினார்.

முந்தைய அதிமுக ஆட்சியின் மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், கொரோனாவை முந்தைய அதிமுக ஆட்சி கட்டுப்படுத்திவில்லை என்று குற்றஞ்சாட்டினார். கொரோனாவை பற்றி எதுவும் தெரியவில்லை, மருந்து இல்லை, மருத்துவர்கள் இல்லை என்று கூறிவந்தார் எடப்பாடி. அதற்காகத் தான் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்தினோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினால் கலந்து ஆலோசிக்க முடியும் என்று வலியுறுத்தி இருந்தோம். இப்போது அனைத்து கட்சி கூட்டத்தை நாங்கள் கூட்டிய போது அதிமுக உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர் என்றார்.

மேலும், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனாவுக்கு தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைக்கும் என்று உறுதியுடன் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என ஊடகங்களில் பலர் வருத்தம் தெரிவித்ததாக கூறினார்.