‘வாழை விவசாயிகளை நேரில் சந்தித்து’ குறைகளை கேட்டறிந்த முதல்வர்!

 

‘வாழை விவசாயிகளை நேரில் சந்தித்து’ குறைகளை கேட்டறிந்த முதல்வர்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முதல்வர் பழனிசாமி தீவிரமாக பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளார். ஒவ்வொரு மாவட்டமாக சென்று, தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களையும் மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளையும் எடுத்துச் சொல்லி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று நாமக்கல் மாவட்டம் சென்றிருந்த அவர், வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். ஒரு வீட்டில் அமைச்சர்களுடன் அமர்ந்து டீ குடித்ததாக வீடியோக்கள் வைரலானது.

‘வாழை விவசாயிகளை நேரில் சந்தித்து’ குறைகளை கேட்டறிந்த முதல்வர்!

இதைத் தொடர்ந்து, இன்று அவர் திருச்சி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது வாழை தோட்டத்தில் இருந்த விவசாயிகளிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார். மாணவர்களின் நலனுக்காக இலவச கல்வி திட்டம், மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு திட்டம் போன்ற பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகவும் தாங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால் மட்டும் போதும், மற்ற அனைத்தையும் அரசே பார்த்துக் கொள்ளும் என்றும் விவசாயிகளிடம் நம்பிக்கை தெரிவித்தார்.

‘வாழை விவசாயிகளை நேரில் சந்தித்து’ குறைகளை கேட்டறிந்த முதல்வர்!

மேலும், வாழைப்பட்டையில் இருந்து துணி தயாரிக்கலாம் என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்திருப்பதன் படி, அவரது தலைமையில் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும் முசிறி – குளித்தலை அருகே தடுப்பு அணை கட்டப்படும் என்றும் உறுதியளித்த பின்னர், விவசாயிகளிடம் இருந்து விடைபெற்றார்.