கருணை காட்டிய ஹரியானா அரசு…. தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு விற்க மற்றும் வெடிக்க அனுமதி…

கருணை காட்டிய ஹரியானா அரசு…. தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு விற்க மற்றும் வெடிக்க அனுமதி…

ஹரியானா அரசு அம்மாநிலத்தில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டும் வர்த்தகர்கள் பட்டாசுகள் விற்கவும், மக்கள் பட்டாசு வெடிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.

தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதிகரித்து வரும் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் பல மாநிலங்கள் பட்டாசுகள் விற்பனை மற்றும் வெடிக்க தடை விதித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமையன்று ஹரியானா அரசும் தனது மாநிலத்தில் பட்டாசு விற்க மற்றும் வெடிக்க தடை விதித்தது. இது பட்டாசு வர்த்தகர்களுக்கு பெரிய அடியாக விழுந்தது. இதனையடுத்து பட்டாசு விற்பனைக்கான தடையை நீக்க வேண்டும் என்று அரசிடம் பட்டாசு வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கருணை காட்டிய ஹரியானா அரசு…. தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு விற்க மற்றும் வெடிக்க அனுமதி…
பட்டாசு

இதனையடுத்து ஹரியானா அரசு பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கான தடையை சிறிது தளர்த்தியுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் டிவிட்டரில், ஹரியானாவில் தீபாவளியன்று மக்கள் 2 மணி நேரம் பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் அனுமதிக்கப்படுவார்கள். அதிகரித்து வரும் காற்று மாசுவை அடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்க இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

கருணை காட்டிய ஹரியானா அரசு…. தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு விற்க மற்றும் வெடிக்க அனுமதி…
தேசிய பசுமை தீர்ப்பாயம்

கடந்த காலங்களில் மாசுபாடு, கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அதிகரிப்பு காணப்பட்டது. மாசுபாட்டை குறைப்பதற்கும், கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பதிவு செய்து இருந்தார்.