தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்!

தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்!

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் .

தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 25லட்சத்து 52 ஆயிரத்து 49 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 33ஆயிரத்து 966 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில்137 மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிதி நிறுவனங்கள் அளிக்கும் நிதியின் மூலமாக தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்!

இந்நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் சிஎஸ்ஆர் நிதியுதவி மூலம் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 6 தனியார் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் நிதியுதவி மூலம் 2 கோடியே 37 லட்சம் ரூபாயில் 36 ஆயிரம் பேருக்கு காவேரி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்ட் தடுப்பூசி ஒரு டோஸ் 780 ரூபாய்க்கும், கோவாக்சின் தடுப்பூசி ஒரு டோஸ் 1410 ரூபாய்க்கும் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தனியார் மருத்துவமனையில் இனி இலவச தடுப்பூசி திட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படவுள்ளது .