நாமக்கல்லில் முதல்வர் பழனிசாமி ஆய்வு.. ரூ.243.35 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்!

நாமக்கல்லில் முதல்வர் பழனிசாமி ஆய்வு.. ரூ.243.35 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக தற்போது கொரோனா கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதல்வர் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக மதுரை, தென்காசி, நெல்லை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்ற முதல்வர், அங்கு பல கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டத்துக்கு சென்று முதல்வர் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

நாமக்கல்லில் முதல்வர் பழனிசாமி ஆய்வு.. ரூ.243.35 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்!

நாமக்கல்லில் முடிந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்து ரூ.243.35 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் முதல்வர் அடிக்கல் நாட்டினார். மேலும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 19,132 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.